ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சக்தி (வயது 41). கூலித் தொழிலாளி. இவர் மொபட்டில் நேற்று முன்தினம் மேட்டு புலியூர் பக்கமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மீது மொபட் மோதியது. இந்த விபத்தில் சக்தி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.