தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் பவ்யா (வயது 14). தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பவ்யா நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டின் முன் உள்ள மோட்டாரை ஆன் செய்வதற்காக மின்சார ஓயரை தொட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.