இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு
பழவூர் அருகே இறந்த நிலையில் கடற்பசு கரை ஒதுங்கியது.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே பஞ்சல் மீனவ கிராமத்தில் நேற்று இறந்த நிலையில் கடற்பசு கரை ஒதுங்கியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் முருகன் மற்றும் வனத்துறையை சேர்ந்த மருத்துவர் மனோகரன், செட்டிகுளம் கால்நடை மருத்துவர் அனிதா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினரும் வந்து பார்வையிட்டனர். சுமார் 300 கிலோ எடை கொண்ட ஆண் கடற்பசு எனவும், மூன்று மீட்டர் நீளம் இருக்கும் எனவும் தெரிவித்தனர். பின்னர் கடற்பசுவை பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர்.