மலேசியாவில் இறந்த கணவர் உடலை மீட்டு தர வேண்டும்-கலெக்டரிடம் பெண் கோரிக்கை

மலேசியாவில் இறந்த கணவர் உடலை மீட்டு தர வேண்டும் என்று கலெக்டரிடம் பெண் கோரிக்கை விடுத்தார்.

Update: 2022-09-26 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே உள்ள பொன்னலிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 44). இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.இந்நிலையில் ரமேஷ் மலேசியா நாட்டிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டல் வேலைக்கு சென்றார். ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் கடந்த 17-ந்தேதி கீழே விழுந்து விட்டதாகவும் இதனால் காயம் ஏற்பட்டு மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக அவரது மனைவி சித்ராவிடம் அந்த கடையின் உரிமையாளர் போன் மூலம் தகவல் கூறியதோடு அறுவை சிகிச்சை செய்ய அனுமதியும் கேட்டுள்ளார்.சித்ராவும் எப்படியாவது எனது கணவரை காப்பாற்றி விடுங்கள் என கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி காலை 10 மணியளவில் ரமேஷ் இறந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர்.மிகவும் வறுமை நிலையில் உள்ள எங்களால் எனது கணவரை மலேசியாவில் இருந்து கொண்டு வர முடியாது.எனவே அரசு எனது கணவரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் சித்ரா மனு கொடுத்து உள்ளார். அந்த மனுவில் தனது கணவரை மீட்பதுடன் மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கும் எனக்கு அரசின் சார்பில் ஏதாவது ஒரு குறைந்த சம்பளத்தில் வேலை வழங்க வேண்டும் என உருக்கமுடன் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்