தடுப்பணையில் செத்து மிதக்கும் மீன்கள்
எசைனூர் கிராமத்தில் உள்ள தடுப்பணையில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் தடுப்பணையில் ஜிலேபி மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசிவருகிறது. நகராட்சி கழிவுநீர், சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலந்ததால் ஏராளமான மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது. மீன்கள் இறந்து பல நாட்களாக கிடப்பதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.