தொழிலாளி உடல் சொந்த ஊருக்கு வந்தது

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பட்டுக்ேகாட்டை தொழிலாளி உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

Update: 2023-08-29 21:06 GMT

பட்டுக்கோட்டை;

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட பட்டுக்ேகாட்டை தொழிலாளி உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

மலேசியாவில் வேலை

பட்டுக்கோட்டை மன்னை நகரை சேர்ந்தவர் அன்பழகன்(வயது69). இவருடைய மனைவி வசந்தா(64). இவர்களுடைய மகன் விநாயகமூர்த்தி (41). இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மலேசியாவில் சென்று வேலை பார்த்து சம்பாதிக்க விரும்பிய விநாயகமூர்த்தி ரூ.7 லட்சம் கொடுத்து மலேசியாவுக்கு சென்றார். அங்கு ஒரு இரும்புக் கடையில் அவர் வேலை பார்த்து வந்தார். சில நாட்கள் கழித்து அந்த இரும்புக் கடை உரிமையாளர் ரூ.7 லட்சம் கொடுத்தால் தான் இங்கு வேலை பார்க்க முடியும் என கூறி விநாயகமூர்த்திக்கு தொல்லை கொடுத்தார்.

கொலை

இதனால் விநாயகமூர்த்தி தன் தந்தை அன்பழகனுக்கு தகவல் கொடுத்து ரூ.7 லட்சத்தை தனக்கு அனுப்பி வைக்கும்படி கூறினார். அதன்படி அவருடைய தந்தை கடந்த 3-ந்தேதி ரூ.7 லட்சத்தை மலேசியாவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மறுநாள் விநாயகமூர்த்தி கொலை செய்யப்பட்டு விட்டதாக பட்டுக்கோட்டையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மனைவி, குழந்தைகள் கதறி அழுதனர்.

உடல் கொண்டுவரப்பட்டது

மேலும் தமிழக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தங்கள் மகன் உடலை மலேசியாவில் இருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். ,. இதைத்தொடர்ந்து மலேசியாவில் உள்ள அரிமா சங்கத்தினரின் தீவிர முயற்சியினால் 24 நாட்களுக்குப் பிறகு விநாயகமூர்த்தியின் உடல் விமான மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. திருச்சிக்கு அவருடைய தந்தை அன்பழகன் மற்றும் உறவினர்கள் சென்று விநாயகமூர்த்தியின் உடலை அதிகாலை 3 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் காலை 8 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. மலேசியாவுக்கு வேலைக்கு சென்றவர் கொைல செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்