மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே உள்ளே சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் என்பவரின் மனைவி மாதம்மாள் (வயது 60). இவர் ரெயில்வே கேட் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அந்த பகுதியில் உள்ள சாலையில் மாதம்மாள் நடந்து சென்றார். அப்போது அவர் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை மாதம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.