டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் மோதி மனைவி கண் முன்னே விவசாயி பலி

Update: 2023-02-20 18:45 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள சீங்கேரியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67). விவசாயி. இவருடைய மனைவி ராஜாமணி (58). இவர் 2 பேரும் நேற்று பாப்பாரப்பட்டியில் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ஜக்கசமுத்திரம் முனியப்பன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெரியசாமி மனைவி கண் முன்னே பலியானார். ராஜாமணி பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்