கொல்லிமலை டாஸ்மாக் கடை பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை
சேந்தமங்கலம்:
கொல்லிமலை செம்மேட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த டாஸ்மாக் கடைக்கு வந்தவர்கள் வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்போது முதியவரின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்து கிடந்த முதியவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.
ஆனால் அவர் கொல்லிமலை மாற்றுப்பாதையில் நரியன் காடு வரை சென்றதற்கான பஸ் டிக்கெட் மட்டும் சட்டை பாக்கெட்டில் இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.