பாப்பாரப்பட்டி அருகே ஓய்வு பெற்ற டாக்டர் திடீர் சாவு

Update: 2023-01-27 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள செக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் (வயது 64). இவர் கால்நடை டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இதய நோய் இருந்து வந்தது. இதற்காக கோவை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஓய்வு பெற்ற டாக்டர் திடீரென இறந்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்