பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பரிதாபமாக இறந்தார்.
முதியவர்
பாப்பாரப்பட்டி அருகே உள்ள தின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூவா கவுண்டர் (வயது 80). விவசாயி. இவர் நேற்று முன்தினம் நாகதாசம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள டீ கடைக்கு வந்துள்ளார். அங்கு டீ குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
வழியில் அந்த பகுதியில் உள்ள சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் பூவா கவுண்டர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரிதாப சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பூவா கவுண்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் பூவா கவுண்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.