பரமத்தி அருகே லாரி மீது கார் மோதி தொழிலாளி சாவு

Update: 2023-01-16 18:45 GMT

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் அய்யாவு. அவரது மகன் வீராசாமி(வயது23). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமத்தி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக வீராசாமி மோதினார்.

இதில் படுகாயம் அடைந்த வீராசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்