மதுபோதையில் துணி துைவக்க சென்ற தொழிலாளி கிணற்றில் விழுந்து சாவு
மதுபோதையில் துணி துவைக்க சென்ற தொழிலாளி கிணற்றில் விழுந்து இறந்தார்.
நம்பியூர்
மதுபோதையில் துணி துவைக்க சென்ற தொழிலாளி கிணற்றில் விழுந்து இறந்தார்.
கட்டிட தொழிலாளி
நம்பியூர் அருகே உள்ள கோசனம் பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் சுரஷே் (வயது 28). கட்டிட தொழிலாளி. கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். மேலும் அவர் வேறு ஒருவரை மணந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
சுரேசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் தெரிகிறது. கோபியை சேர்ந்த குமார் என்பவர் வீட்டில் தங்கிக்கொண்டு கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார்.
வாரம் ஒருமுறை சொந்த ஊரான கோசனம் அருகே உள்ள பெரியகாடு பகுதிக்கு சென்று வந்துள்ளார்.
மதுகுடித்தனர்...
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேசும், அவருடைய நண்பர் சதீஷ் என்பவரும் சேர்ந்து ஒன்றாக மது குடித்து உள்ளனர். அதன்பின்னர் சதீஷ் அருகே இருந்த குடிசைக்கு தூங்க செல்வதாக கூறியுள்ளார்.
அதைக்கேட்ட சுரேஷ் நான் துணி துவைக்க செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன்பின்னர் அவர் திரும்பவரவில்லை. சதீஷ் நேற்று காலை சுரேஷை தேடி சென்றுள்ளார். அப்போது கிணற்றின் மேல் பகுதியில் அவரின் துணிகள் கிடந்ததால் அவர் உள்ளே விழுந்து இருக்கலாம் என்று நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
உடல் மீட்பு
அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது சுரேஷின் உடல் கிடைத்தது. அதை மேலே கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும் இதுகுறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.