சத்தியமங்கலம் அருகே வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை சாவு- தந்தையுடன் தோட்டத்துக்கு சென்றபோது பரிதாபம்
சத்தியமங்கலம் அருகே தந்தையுடன் தோட்டத்துக்கு சென்ற 1½ வயது குழந்தை வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி இறந்தது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே தந்தையுடன் தோட்டத்துக்கு சென்ற 1½ வயது குழந்தை வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி இறந்தது.
1½ வயது குழந்தை
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அக்கரை நெகமம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய மனைவி பேபி. இவர்களுடைய மகள் தன்யஸ்ரீ (1½ வயது).
மோகன்ராஜ் தன்னுடைய விவசாய நிலத்தில் சம்பங்கி பூ சாகுபடி செய்துள்ளார்.
நேற்று காலை மோகன்ராஜ் மகள் தன்யஸ்ரீைய தூக்கிக்கொண்டு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை நீர் தேங்கியிருந்தது. அதை வெளியேற்றுவதற்காக மோகன்ராஜ் குழந்தையை தோட்டத்தில் விட்டுவிட்டு வரப்பு வெட்டினார்.
உடல் மீட்பு
சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்தபோது தன்யஸ்ரீயை காணவில்ைல. பதறி அடித்து தோட்டத்தில் தேடினார். ஆனால் காணவில்லை. தோட்டத்தில் இருந்து வடிகால் நீர் செல்லும் வாய்க்காலில் குழந்தை தவறி விழுந்துவிட்டதோ? என்று அவர் சந்தேகம் அடைந்து உடனே சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் வாய்க்காலுக்குள் இறங்கி தேடினார்கள். சிறிது நேரத்தில் தன்யஸ்ரீயின் உடலை மீட்டார்கள்.
பெற்றோர் கதறல்
மோகன்ராஜ் வரப்பு வெட்டிக்கொண்டு இருக்கும்போது விளை யாட்டுத்தனமாக வாய்க்கால் அருகே சென்ற குழந்தை தவறி விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குழந்தையின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தையின் உடலை பார்த்து, பெற்றோர் கதறி துடித்தது பார்ப்பவர்கரள கண்கலங்க செய்தது.