பாகலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி

Update: 2022-11-05 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள அடவனப்பள்ளியை சேர்ந்தவர் சங்கர். விவசாயி. இவரது மனைவி அனிதா (வயது 28). இவர்களது வீட்டின் முன்புறம் தரைமட்ட தண்ணீர் தொட்டி உள்ளது. சம்பவத்தன்று வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் அனிதா தவறி விழுந்தார். அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அனிதா இறந்து விட்டார். இதுகுறித்து அனிதாவின் தந்தை முனியப்பா கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்