பூருட்டி வாய்க்கால் தடுப்பணையில் அடைப்பை அகற்றும் பணி
அனந்தநல்லூர் ஊராட்சியில் பூருட்டி வாய்க்கால் தடுப்பணையில் அடைப்பை அகற்றும் பணி நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன் அறிவுரைப்படி குத்தாலம் ஒன்றியம் அனந்தநல்லூர் ஊராட்சி தெற்குதெரு ஊத்தாங்கரை அருகே பூருட்டி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நாணல் செடிகள் உள்ளிட்டவைகளால் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பை அகற்றும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாசெல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் குத்தாலம் வட்டாரத்தில் உள்ள பல ஊராட்சிகளில் அடைப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.