விடிய, விடிய பலத்த மழை

திருமருகல் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

Update: 2022-12-05 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த மழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த மாதம் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் இங்குள்ள பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.

விடிய, விடிய பெய்தது

இந்த நிலையில் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். திட்டச்சேரி, திருமருகல், அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்