குலதெய்வ கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காட்டு பரமக்குடியில் திருவேட்டை உடைய அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திரைப்பட நடிகர் வடிவேலுவின் குல தெய்வ கோவிலாகும். இங்கு நடிகர் வடிவேலு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அவரது குலதெய்வ கோவிலில் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நடிகர் வடிவேலுவும் அவரது குலதெய்வ கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
சமீபத்தில் அவர் தாயார் இறந்ததால் அவர் கோவிலுக்கு உள்ளே வராத நிலையில் கோவில் வாசலிலே நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு வந்திருந்தவர்களும் பொதுமக்களும் நடிகர் வடிவேலுவுடன் ஆர்வத்துடன் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.