ராமேசுவரம் கோவிலில் கங்கை தீர்த்தத்துடன் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-09-22 12:43 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு இன்று ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். காசியில் உள்ள கங்கை தீர்த்தத்தை கொண்டு வந்து கங்கை தீர்த்தத்தால் சாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையிலும் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

அவருடன் அவரது தம்பி ராஜா 2-வது மகன் ஜெயப்பிரதீப் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். தொடர்ந்து அம்பாள் மகாலட்சுமி ஆஞ்சநேயர் உள்ளிட்ட சந்ததிகளுக்கும் சென்று ஓ.பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார்.

ஏற்கனவே கடந்த 18-ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார். பின்னர், காசியில் சாமி தரிசனம் முடித்து அங்கிருந்து கங்கை தீர்த்தத்தை கொண்டு வந்து இன்று மீண்டும் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்