திருச்செந்தூர் கோவிலில் எச்.ராஜா சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசை விமர்சிப்பதற்கு தி.மு.க.விற்கு தகுதி இல்லை. தமிழ்நாட்டில் இந்து மத வெறுப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. போன்றவர்கள் இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இந்து மதத்தை அழிப்பதாக தி.மு.க. பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்கான எதிர்வினை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பூஜ்ஜியம் பெறும். இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.