ராமேசுவரம் கோவிலில் புத்தாண்டு தரிசனம்
கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ்ப்புத்தாண்டு நேற்று பிறந்தது. கோவில்களில் புத்தாண்டு தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக முதல் பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம். இதே போல் அக்னி தீர்த்த கடலிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.