பழனி முருகன் கோவிலில் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் இசைமைப்பாளர் கார்த்திக்ராஜா சாமி தரிசனம் செய்தார்.
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவ்வப்போது வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று முகூர்த்த நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இந்தநிலையில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக்ராஜா இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசித்தார். பின்னர் அடிவாரம் வந்த அவர், காரில் புறப்பட்டு சென்றார்.