சாலையில் கவிழ்வது போல சென்ற தனியார் பஸ்

மயிலாடுதுறை அருகே அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் கவிழ்வது போல ஒரு தனியார் பஸ் சென்றது. எனவே மாணவர்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-15 19:15 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் கவிழ்வது போல ஒரு தனியார் பஸ் சென்றது. எனவே மாணவர்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவிழ்வது போல சென்ற பஸ்

மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் வந்த ஒரு தனியார் பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியவாறு பயணம் செய்தனர். தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை வந்த தனியார் பஸ்சில் மன்னம்பந்தல், தருமபுரத்தில் உள்ள கல்லூரிகளின் மாணவ- மாணவிகள் அதிக அளவில் ஏறினர். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. அதிக அளவில் பயணிகள் ஏறியதால் பஸ் ஒரு பக்கம் சாய்வாக கவிழ்வது போல் அபாயகரமாக சென்றது.

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை உணராமல் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். பள்ளி கல்லூரிகள் நேரங்களில் பெரும்பாலான பஸ்களில் மாணவர்கள் படியில் தொங்கியபடியே ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழித்தடத்தில் ஏராளமான பள்ளி கல்லூரிகள் உள்ளன. எனவே மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வசதியாக போக்குவரத்து துறையினர்காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

Tags:    

மேலும் செய்திகள்