ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் ஆபத்தான சிமெண்டு மூடி

ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் ஆபத்தான சிமெண்டு மூடி

Update: 2023-09-15 21:14 GMT

ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் சாலை பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் போடப்பட்டுள்ள புதைவட நெட்ஒர்க் கேபிள் சிமெண்ட் மூடி வெளியில் தெரியும்படி உள்ளது.

மேலும் மூடியின் இருபுறங்களும் உடைந்து உள்ளதால் அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் நீண்டு கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே உடைந்த மூடியை அகற்றிவிட்டு வேறு மூடி வைத்து, விரைவில் தார்ரோடுபோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்