அரசு அருங்காட்சியகத்தில் நடன போட்டி
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடன போட்டி நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருநை நடனப் போட்டி (பரதநாட்டியம் -கிராமிய நடனம் போட்டிகள்) நேற்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். போட்டியில் பரதம், மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை) போன்ற நடனங்களை முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். நெல்லை மாவட்டத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய கலை நடனங்களை விரும்பி ஆடினர்.
போட்டியில் 5-வயது முதல் 20- வயது வரை நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் நடுவர்களாக கலா ரத்தினம் சிவகாமி, கலை வளர்மணி கல்யாணி, சுப துர்கா நெல்லையப்பன், கலை ஆசிரியை சரணம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியை பிரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் தமிழ் புத்தாண்டு அன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.