21 வார்டுகளிலும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்

21 வார்டுகளிலும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என வேதாரண்யம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-08-01 18:45 GMT

வேதாரண்யம்:

21 வார்டுகளிலும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என வேதாரண்யம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்

வேதாரண்யம் நகராட்சி சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா முன்னிலை வகித்தார். நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பு ஊதியம் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, நகராட்சியில் உள்ள 21 வார்டு களிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைப்படும்.

குடிநீர் வசதி

குடிநீர் வசதி ஏற்படுத்துதல், தெருவிளக்குகள் அமைத்தல், நகராட்சி பகுதியில் உள்ள மண் சாலைகளை தார்ச்சாலைகளாக அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

வேதாரண்யம் நகராட்சி பொறியாளராக பணியாற்றிய முகமது இப்ராகிம் பதவி உயர்வு பெற்று நகராட்சி உதவி செயற்பொறியாளராக புதுக்கோட்டை நகராட்சிக்கு செல்கிறார்.

பாராட்டு

அவருக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி, துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதாமற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்