சேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்றி அமைக்க வேண்டும்

கோட்டூர் அருகே சேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-12 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூர் அருகே சேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்த்தேக்க தொட்டி

கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தட்டான் கோவில் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, அதிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவதற்காக அதன் அருகில் மின்சாதன பெட்டி (சுவிட்ச் போர்டு) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மின்சாதன பெட்டி சேதமடைந்து திறந்து கிடக்கின்றது.

மின்சாதன பெட்டியால் அச்சம்

இந்த பகுதியை அன்றாடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடந்து செல்கின்றனர். எனவே திறந்து கிடக்கும் மின்சாதன பெட்டியினால் ஆபத்து ஏற்படுமோ? என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

அதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் புதிய மின்சாதன பெட்டி அமைப்பதற்கான ஒற்றைசுவர் கட்டப்பட்டது. ஆனால் ஒற்றை சுவர் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் மின்சாதன பெட்டி மாற்றி அமைக்கவில்லை.

மாற்றி அமைக்க வேண்டும்

வரும் காலம் மழைக்காலம் என்பதால் சேதமடைந்த மின்சாதன பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்சாதன பெட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்