பெட்டிக்கடை சேதம்

பெட்டிக்கடை சேதப்படுத்தியவர்கள் மீது முதியவர் போலீசில் புகார் செய்தார்.

Update: 2022-12-08 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தை சேர்ந்த மலைச்சாமி (வயது 80) என்பவர் இளையான்குடி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவுப்படி அனுமதி பெற்று புறவழிச்சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். எனது கடையால் கீழாயூர் புறவழிச்சாலையில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடை பாரில் வருமானம் குறைவாக இருப்பதாகவும், எனது கடையை மூடும் படியும் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று 4 பேர் சேர்ந்து எனது கடையை மூட சொல்லி, பொருட்களை சூறையாடி சென்றனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்தனர். இதனால் தனக்கு ரூ.60 ஆயிரம் வரை சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவண போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்