கச்சிராயப்பாளையம் அருகே உள்வாங்கிய மணிமுக்தாற்று பாலம் போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை
கச்சிராயப்பாளையம் அருகே உள்வாங்கிய மணிமுக்தாற்று பாலம் போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாவடிப்பட்டு-அகரம் கிராமத்துக்கு இடையே மணிமுக்தாற்றின் குறுக்கே உள்ள பழமையான பாலத்தில், மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் அதன் பலத்தை இழந்து நிற்பதால், பாலம் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது. எனவே அதன் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று ஊராக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கிராம மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சேதமான பாலத்தையும் அவர்கள் நேரில் பார்வையிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.