காரை ஆதிதிராவிடர் பள்ளிக்கட்டிடம் சேதம்

காரை ஆதிதிராவிடர் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-30 17:28 GMT

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி உள்ளது. அதில் ஒரு பகுதி கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. அதில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது.

தற்போது பயனற்ற நிலையில் இருக்கும் அந்தப் பள்ளிக்கூட கட்டித்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்