வாழை, மஞ்சள் பயிர்கள் சேதம்

Update: 2023-04-22 19:30 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பேரூராட்சி பகுதியில் விவசாயிகள் வாழை, நெல், மஞ்சள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கீரிப்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து, சேதம் அடைந்தன. மேலும் மஞ்சள், மக்காச்சோளம் பயிர்களும் சேதமாகின. இதனால் விவசாயிகள் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்