பழுதடைந்த சத்துணவு சமையல் கூடம்

வலங்கைமான் அருகே பழுதடைந்த சத்துணவு சமையல் கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2022-06-29 18:09 GMT

வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள வீராணம் ஊராட்சி கிராம குடியான தெரு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு சத்துணவு சமையல் செய்து தருவதற்கு பள்ளியின் எதிர்புறம் சத்துணவு சமையல் கூடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதடைந்து சுற்றுச்சுவர் மேல்தளம் தரைதளம் என கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் சத்துணவு சமையல் கூடம் உள்ளது.இருப்பினும் தற்போது அருகில் உள்ள பழுதடைந்த பழைய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக சத்துணவு சமையல்கூடம் இயங்கி வருகிறது. எனவே பழைய சத்துணவு கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய சத்துணவு சமையல் கூடம் கட்டித்தர வேண்டும் அல்லது பழைய சத்துணவு கூட சமையல் கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்