திருப்பூர் கே.பி.என். காலனி அண்ணா நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நால்ரோடு பகுதியின் மையப்பகுதியில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஊத்துக்குளி ரோடு இரண்டாவது ரெயில்வே கேட்டிலிருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் இந்த வழியாக செல்கிறது. இதேபோல் கனரக வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன. இதனால் குண்டும், குழியுமாக உள்ள ரோடு நாளுக்கு நாள் அதிகமாக சேதமடைந்து வருகிறது. எனவே இந்த ரோடை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.
-ரூபின்,கே.பி.என்.காலனி.