ஆற்றுப்பாலம் அருகே தரைத்தளம் சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூரில் ஆற்றுப்பாலம் அருகே தரைத்தளம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-07-01 17:51 GMT

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூரில் ஆற்றுப்பாலம் அருகே தரைத்தளம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

வெண்ணாற்று பாலம்

கூத்தாநல்லூர் அருகே பண்டுதக்குடிக்கும், பாண்டுகுடிக்கும் இடையே வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தையொட்டிய இடத்தில் தண்ணீர் தேக்கி வைக்கும் மதகு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மதகு குழாய்கள் மூலம், ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை தேவையான நேரத்தில் திறந்து விடுவதும், தேவையற்ற நேரத்தில் தண்ணீரை மூடுவதுமாக இயக்கப்படுகிறது. மேலும் மதகு குழாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் போது அதன் வேகத்தை குறைப்பதற்காக பாலத்தின் கீழ்ப்பகுதியில், பாலத்தோடு இணைந்து தரைத்தளம் அமைக்கப்பட்டது.

சீரமைக்க கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளாக தரைத்தளம் அமைக்கப்பட்ட இடத்தில் மணல் அதிக அளவில் அள்ளப்பட்டதால், தரைத்தளத்தின் கீழ்ப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு தரைத்தளம் இடிந்து விழுந்து சிதறிய நிலையில் உள்ளது. கடந்த 2 வருடங்களாக தரைத்தளம் இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. தரைத்தளம் முழுவதும் சேதமடைந்தால், பாலமும் சேதமடைய வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சேதமடைந்துள்ள தரைத்தளத்தை முழுவதும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்