இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்
ஆலடிக்குமுளை ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை அதிகாாிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
கரம்பயம்;
ஆலடிக்குமுளை ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை அதிகாாிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
தொகுப்பு வீடுகள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் கடந்த 1992-ம் ஆண்டு தமிழக அரசு கட்டிக் கொடுத்த 20 கான்கிரீட் தொகுப்பு வீடுகளில் சுமார் 30 வருட காலமாக மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த வீடுகள் அனைத்தும் மேற்கூரைகள் 2-ஆக பிளந்து உள்பக்கம் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து மேற்கூரைகள் ஜன்னல் கம்பிகள் போல் காட்சியளிக்கிறது. இது பற்றி அப்பகுதியில் உள்ள மக்கள் கூறியதாவது:-கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபா மாதம் 12-ந் தேதி எங்களில் 20 பேருக்கு அப்போதைய தமிழக அரசு வீடுகள் கட்டிக் கொடுத்தது.
சேதமடைந்த வீடுகள்
இந்த வீடுகள் கட்டிமுடித்து சுமார் 30 வருடம் ஆகிறது. வீட்டில் நாங்கள் இரவு தூங்கும் போது சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது. மழை பெய்தால் தண்ணீர் வீட்டுக்குள் ஓழுகுகிறது.கன மழை பெய்யும் போதும் இடி இடிக்கும் போதும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது.எனவே தமிழக அரசு எங்களுக்கு புதிதாக அதே இடத்தில் மீண்டும் வீடுகளை கட்டித் தர வேண்டும். இங்கு பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் கல்லூரியில் படிக்கக்கூடிய குழந்தைகளும் இருக்கிறார்கள். நாங்கள் அத்தனை பேரும் தினசரி கூலி வேலை செய்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்களால் அந்த வீடுகளை எடுத்து கட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே தமிழக அரசு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.