சென்னையில் மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பு...! புகைப்பட தொகுப்பு
மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் சென்னையில் ஏற்படுத்திய பாதிப்புகள்.
சென்னை,
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு கேளம்பாக்கம் அருகே கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழையும், பலத்த காற்றும் வீசியது. சென்னையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சென்னையில் 300 மரங்கள் சாய்ந்தன.
மின்சாரம் தாக்கி 4 பட்டினம்பாக்கம் அருகே 2 பேர் உள்பட 2 பேர் பலியாகினர். சைதாப்பேட்டையில் புயலின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார்.
சென்னை, செங்கல்பட்டில் மட்டும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் கேளம்பாக்கம் அருகே கரையை கடக்க தொடங்கியது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மாண்டஸ் புயல் காரணமாக புழுதிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்த ராட்சத மரம் உடைந்து விழுந்தது. இதனால் புழுதிவாக்கம் மந்தைவெளி தெருவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மாண்ட்ஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. இது ராட்சத கேஸ் சிலிண்டர் போன்று காட்சியளித்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மெரினா கடற்கரையில் இருக்கம் கடைகள் மழை நீரில் மூழ்கியது. மேலும், கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிக்கான மரப்பாதை முழுவதும் மண்ணில் புதைந்தது.
புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசியதால் மாமல்லபுரம் தேவனேரியில் மின்கம்பங்கள், சிமெண்ட் சாலைகள், தனியார் ஓட்டலின் நிழற்குடைகள் சேதம் அடைந்தது.
சென்னை சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில் தெப்பக்குளம் அருகில் உள்ள பழமையான மரம் புயல் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்தது.
மாண்ட்ஸ் புயல் காரணமாக பட்டாபிராம் பகுதியில் சாலையில் முறிந்து விழுந்த மரங்களை ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
சென்னை மாம்பலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மதில் சுவர் விழுந்து கார் சேதமடைந்தது.
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த காற்று வீசியது. இதில் நகரில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. கீழ்ப்பாக்கத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்களை தீவிரமாக ஈடுபட்டன.