சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

Update: 2022-12-26 18:23 GMT

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

பயணிகள் நிழலகம்

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தை அடுத்துள்ள, அரிச்சந்திரபுரம் கடைவீதி சாலையையொட்டி அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழலகத்தை அரிச்சந்திரபுரம், வடபாதிமங்கலம், உச்சுவாடி, மாயனூர், மன்னஞ்சி, பெரியகொத்தூர், ராமநாதபுரம், சோலாட்சி மற்றும் அதை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

விாிசல்

மேலும், கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர் போன்ற நகர பகுதிகளில் படிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்று வருவோர் பஸ்கள் வரும் வரை காத்திருக்கும் வகையில் இந்த நிழலகத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழலகத்தில்கடந்த சில ஆண்டுகளாக சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு நிழலகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், பயணிகள் நிழலகத்தில் மேற்கூரை பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கீரிட் கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது.இதனால், விரிசல்கள் வழியாக மழை தண்ணீர் உள்ளே கசிகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்