மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா (40). கூலித்தொழிலாளி. இவர்களுடைய வீட்டில் சம்பவத்தன்று மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், பீரோ, மெத்தைகள் உள்பட பல்வேறு சாதனங்கள் எரிந்து நாசமாயின. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.