பொன்குன்றம் ஓடையில் தடுப்பணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு
தே.ரெங்கநாதபுரம் ஊராட்சி பொன்குன்றம் ஓடையில் தடுப்பணை கட்டும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.
உத்தமபாளையம் ஒன்றியம் தே.ரெங்கநாதபுரம் ஊராட்சியில் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டத்தில் ரூ.9½ லட்சம் மதிப்பீட்டில் அங்குள்ள பொன் குன்றம் ஓடையில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயகாந்தன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது பணியை தரமான முறையில் விரைவாக முடிக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அதிகாரி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தே.ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சிவசூரியன், ஊராட்சி செயலாளர் ஆனந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.