வாணியாறு அணையில் இருந்துமேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

Update: 2023-04-27 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டது. அதன்படி அணையின் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுத்திரம், மெணசி, ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி, தென்கரை கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கும், வலதுபுற கால்வாய் வழியாக அதிகாரப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும் தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து இடது, வலதுபுற கால்வாய்களில் சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு தண்ணீரை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டது. இதன் மூலம் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்