தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மாணவிகள் சாதனை
வினாடி-வினா போட்டியில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்.
வள்ளியூர் (தெற்கு):
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கணித விழா-2023 நடைபெற்றது. இதில் பங்கேற்ற தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி இளங்கலை கணிதவியல் துறை மாணவிகள் வெங்கடேஷ்வரி, தில்லை அருந்ததி, அபிநயா ஆகியோர் வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன், கல்லூரி முதல்வர் ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் காமராஜ், ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை செல்வகுமார், துறைத்தலைவர் சபீனாரோஸ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.