தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்.
பாழாகும் பாலாறு
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களில் சிலர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலாற்றில் கொட்டுகின்றனர். இதனால் ஆற்றில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அந்தக் குப்பைகளில் தீ வைத்து செல்வதால் அப்பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து வாகனங்களில் செல்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.
-மலரவன், வேலூர்.
உயர்கோபுரத்தில் மின் விளக்கு பொருத்துவார்களா?
பேரணாம்பட்டு திரு வி.க.நகர் பாண்டியன் வீதி 4-ல் விநாயகர் கோவில், அரசு வங்கி, கல்யாண மண்டபம், மருத்துவமனை ஆகியவைகள் உள்ளன. உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோபுரம் அமைக்கப்பட்டது. அதில் இன்னும் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கோபுரத்தில் மின் விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.தாயுமானவன், பேரணாம்பட்டு.
சாலைகளை சீரமைக்க வேண்டும்
ராணிப்ேபட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஹாஜிபேட் 2-வது தெரு எப்.எம்.பள்ளி புதிய வார்டு நம்பர் 17 ஆகிய பகுதிகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளது. பழுதான சாலை வழியாக பள்ளிக்கு வரும் பிள்ளைகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
-அப்துல்சமது, மேல்விஷாரம்.
பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும்
ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பினால் அதில் இருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள சாலையை கடந்து செல்ல வேண்டும். அந்த நேரத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு விடும். இதனால் அந்த இடத்தில் சிறு உயர்மட்ட பாலம் அமைக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறு பாலம் முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், வெளியூர் வேலைக்கு செல்வோர் பஸ் ஏற 6 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல ேவண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.
உடைக்கப்படும் குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்வார்களா?
வேலூர் மாநகராட்சி 45-வது வார்டு கமலாட்சிபுரத்தில் உள்ள ராமசாமி பிள்ளை தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சரியாக நடக்கவில்லை. பலரின் வீட்டின் அருேக இருக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் உடைக்கப்படுகின்றன. அதை, சீரமைத்துத் தரும்படி ஊழியர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குள் தார் சாலை போடும் பணிகளுக்கான ஆரம்ப வேலைகள் நடந்து வருகிறது. உடைக்கப்படுகின்ற குடிநீர் குழாய் இணைப்பை மீண்டும் சரி செய்து தர வேண்டும்.
-சுரேஷ், வேலூர்.
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேற்குப் பக்கம் ஆதார் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் ஏராளமான மக்கள் ஆதார் அட்டையில் செல்போன் நம்பர் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வருகிறார்கள். அந்த மையம் அருகே கால்வாயில் இருந்து கழிவுநீர் ெவளிேயறி சுகாதாரச் சீர்ேகட்டை ஏற்படுத்துகிறது. கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகன்நாதன், திருவண்ணாமலை.
குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களில் சிலர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலாற்றில் கொட்டுகின்றனர். இதனால் ஆற்றில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அந்தக் குப்பைகளில் தீ வைத்து செல்வதால் அப்பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்து வாகனங்களில் செல்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.