'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-28 15:23 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்திக்கு நன்றி

ஆண்டிப்பட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சி எம்.சுப்புலாபுரத்தில் சத்துணவு கூடம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து தினத்தந்தியின் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து தற்போது சத்துணவு கூடம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

-நந்தகோபால், ஆண்டிப்பட்டி.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

பழனி லட்சுமிபுரம் பழைய தபால்நிலையம் குறுக்கு தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களின் தொல்லையும் அதிகரித்து விட்டதால், தொற்றுநோய் அபாயம் உள்ளது. சுகாதாரக்கேடு உருவாகும் முன்பு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-வீரவேணி, பழனி.

புதிய ரெயில் சேவை

பழனிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் ரெயிலில் வருகின்றனர். ஆனால் பழனியில் இருந்து திருப்பதி, ராமேசுவரம் போன்ற ஊர்களுக்கு செல்வதற்கு ரெயில் வசதி இல்லை. இதனால் பக்தர்கள் பஸ்சில் செல்லும் நிலை உள்ளது. எனவே பழனியில் இருந்து திருப்பதி, ராமேசுவரம் ஆகிய ஊர்களுக்கு புதிய ரெயில் சேவை தொடங்க வேண்டும்.-கண்ணன், திண்டுக்கல்.

சேதம் அடைந்த சாலை

சாணார்பட்டி ஒன்றியம் ராகலாபுரம் கிராமம் மஞ்சநாயக்கன்பட்டி-தேத்தாம்பட்டி சாலை சேதம் அடைந்துவிட்டது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கபாண்டி, ராகலாபுரம்.

சாலையோரத்தில் மருத்துவ கழிவுகள்

பழனியை அடுத்த சிவகிரிபட்டி ஊராட்சி திருநகரில் சாலை ஓரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. ஊசி, காயத்துக்கு கட்டுப்போட்ட கழிவுகள், முககவசம், மருந்து பாட்டில்கள் உள்பட பல கழிவுகள் கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், பழனி.

Tags:    

மேலும் செய்திகள்