'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-30 22:05 GMT

பழுதடைந்த ரோடு 

கோபியில் ஈரோடு, குன்னத்தூர் ரோடுகள் சந்திக்கும் இடத்தில் (சிக்னல் அருகில்) குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டு மூடப்பட்டது. ஆனால் அந்த குழி முறையாக மூடப்படவில்லை. இதனால் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

தெருநாய் தொல்லை 

அந்தியூர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும் ெதருநாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டு ரோட்டில் ஓடுகின்றன. அவ்வாறு ஓடும் தெருநாய்கள் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனத்தின் குறுக்கே பாய்ந்து செல்கின்றன. இதில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகிறார்கள். இதுபோன்ற விபத்துகள் அந்தியூர் பகுதியில் தினமும் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி தெருநாய்களால் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ரோட்டில் சுற்றிதித்ரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், புதுப்பாளையம்.

செயல்படாத கழிப்பறை

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. அங்கு தாலுகா அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், குடிமை பொருள் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இ-சேவை மையம் ஆகியன செயல்படுகின்றன. இதனால் தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். கழிப்பறை இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள கழிப்பறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

குடிநீ்ர் வேண்டும்

பவானிசாகர் ஒன்றியம் மாதம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாய்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. இங்குள்ளவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. இதனால் தெருக்களில் உள்ள குழாய்கள் மூலமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ெதருக்குழாய்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வினியோகிக்கப்படாததால் இங்குள்ளவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே குடிநீர் முறையாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பிருந்தாவன் நகர்.

Tags:    

மேலும் செய்திகள்