'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்துகளை தடுக்க வேண்டும்
அறச்சலூர்-வெள்ளோடு ரோட்டில் உள்ள சீனிவாசபுரத்துக்கும், கரும்புளியாம்பாளையத்துக்கும் இடையில் உள்ள அபாயகரமான வளைவில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இந்த விபத்துகளை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்தசாமி, கரும்புளியாம்பாளையம்.
ரோடு சீரமைக்க வேண்டும்
சத்தியமங்கலம் அருகே அரசூர் அண்ணா நகரில் உள்ள கான்கிரீட் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. மழை பெய்யும்போது ரோட்டில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரசூர்.
வடிகாலை மூட வேண்டும்
ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுவாயிலுக்கு செல்லும் வழியில் திறந்த நிலையில் சாக்கடை வடிகால் உள்ளது. மழை பெய்யும்போது தண்ணீா் தேங்கினால் சாக்கடை இருப்பது தொியாது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சாக்கடையில் தவறி விழுந்துவிட வாய்ப்புள்ளது. உடனே சாக்கடை வடிகாலை மூடி வைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
குப்பை அகற்றப்படுமா?
கோபியில் இருந்து புதுக்காடு வழியாக கள்ளிப்பட்டி ரோட்டில் 3 இடங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று வீசும்போது அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது குப்பை தூசிகள் விழுகின்றன. எனவே குப்பையை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
சுகாதாரக்கேடு
கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டின் முகப்பு பகுதியில் குப்பை அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
கோபி வாஸ்து நகர் அருகே சக்தி சாந்தி நகரில் உள்ள பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட வாய்ப்புள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து செடி, கொடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வாஸ்துநகர்