தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-09-04 14:53 GMT

 நிழற்குடையில் மின்விளக்கு வேண்டும்

அழகியமண்டபம் சந்திப்பில் நாகர்கோவில் மார்க்கம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் இதுவரை மின்விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் மிகவும் இருளடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் வரும் பயணிகள், குறிப்பாக பெண்கள் அச்சத்துடன் நிற்கிறார்கள். எனவே, நிழற்குைடயில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஆலிவர், அழகியாமண்டபம்

அகற்ற வேண்டிய மின்கம்பம்

காட்டாத்துறை சந்திப்பில் இருந்து மருதூர்குறிச்சி செல்லும் சாலையில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அருகே பூவன்விளைதெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகளில் வெடிப்பு ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, இந்த மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த.சுந்தர்ராஜ், காட்டாத்துறை.

 கழிவுநீர் வெளியேற ஏற்பாடு தேவை

மணவாளக்குறிச்சி புதுக்கடை தெரு, ஆசாரிதெரு, காந்திநகர் போன்ற பகுதிகளில் வீடுகளில் உள்ள கழிவுநீர் வடிகாலில் சென்று கொண்டிருந்தது. தற்போது அதிகாரிகள் வடிகாலில் வரும் கழிவுநீர் குழாைய அடைத்து விட்டனர். இதனால், கழிவு நீர் போகாமல் வீட்டு வளாகத்தில் தேங்கி நின்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறிதளவு நிலம் உள்ளவர்கள் பழைய வீட்டின் அருகே உறிஞ்சி குழி தோண்டினால் வீடு இடியும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி கழிவு நீர் போக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

-ராஜேஷ், புதுக்கடை தெரு.

வேகத்தடை வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சியில் ேகாட்டாரில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் அப்துல் காதர் மருத்துவமனை சந்திப்பு பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்வதால் பாதசாரிகள் சாலையை கடக்க மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே இந்த சாலையில் போதிய இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

வடிகால் ஓடை தேவை

மணவாளக்குறிச்சி சந்திப்பில் இருந்து ஆற்றின்கரை வரை உள்ள சாலையில் மழைநீர் வடிகால் இல்லை. இதனால், மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதுடன் அருகில் உள்ள வீடுகளையும் சூழ்ந்து நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

சீரமைக்க வேண்டிய சாலை

நாகர்கோவில் ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயத்தின் பின்புறமாக செல்லும் கோல்டன் தெரு சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. அந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால் இருச்சக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காட்வின், நாகர்கோவில்.

சாலையை சீரமைக்க வேண்டும்

விழுந்தயம்பலத்தில் இருந்து அம்சி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், இந்த பகுதியில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் வருகிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சேதமடைந்த சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கவேல், விழுந்தயம்பலம்.

Tags:    

மேலும் செய்திகள்