தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்கள் விவரம்.
பாழடைந்து வரும் குடிநீர் கிணறு
திக்கணங்கோடு பஞ்சாயத்தில் கிழக்குதாறாவிளையில் ஒரு பொது குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த கிணறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும், அருகில் உள்ள மரங்களில் இருந்து இலைகள் விழுந்து அழுகி பாழடைந்து வருகிறது. அதில் உள்ள தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பாழடைந்து வரும் கிணற்றை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொன்னுசாமி, கிழக்குதாறாவிளை.
அகற்ற வேண்டிய மரம்
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்காவிளையில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒரு பழமையான மரம் உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி மிகவும் ேசதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மரம் சாலைைய நோக்கி சாய்ந்த வண்ணம் உள்ளது. மரம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழலாம். எனவே பேராபத்து ஏற்படும் முன்பு மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, புதூர்.
தெருவிளக்கு வசதி இல்லை
நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட வடக்குக்கோணம் ஆர்.சி. ஆலயம் எதிரே புதிதாக அமைந்துள்ள தெருவில் இதுவரை தெருவிளக்கு வசதிகள் இல்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் ெதாழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், அந்த ெதருவில் போதிய சாலை வசதியும் இல்லை. எனவே, தெருவிளக்கு வசதியும், சாலை வசதியும் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஏ.ஜி.சேவியர், வடக்குக்கோணம்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
நாகர்கோவில், வடசேரியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. ஆனால், மழையால் மண்ணரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் வலுயிழந்து வருகிறது. தற்போது அந்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் நிற்கிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் சாய்ந்து விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த மின்கம்பத்தை உறுதியான நிலையில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெயராம், ராமன்புதூர்.
சுகாதார சீர்கேடு
வேர்கிளம்பியில் 14-வது வார்டில் சாலையின் குறுக்கே உள்ள உள்ள கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாக்கடை நீர் பாய்ந்து செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நடைபாதையின் குறுக்கே கழிவுநீர் ஓடை திறந்த நிலையில் இருப்பதால் பலர் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, கழிவு நீர் ஓடையில் உள்ள அடைப்பை சரி செய்து, விபத்து ஏற்படாத வண்ணம், ஓடையை கான்கிரீட் சிலாப் மூலம் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஷாஜி, வேர்கிளம்பி.
கிணற்றை பராமரிக்க வேண்டும்
குருந்தன்கோடு அருேக உள்ள மல்லன்கோட்டில் தாளத்துவிளை குடிநீர் திட்ட பணிக்காக அந்த பகுதியில் ஒரு கிணறு தோண்டப்பட்டது. தற்போது அந்த கிணறு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து வருகிறது. இந்த கிணற்றை சுற்றிலும் புதர்கள் வளர்ந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது. எனவே, கிணற்றை தூர்வாரி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஹரிதாஸ், மல்லன்கோடு.
--