தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு வாசகர்கள் அனுப்பிய புகார்.

Update: 2022-07-01 14:26 GMT

குழி மூடப்பட்டது

இரணியல் பேரூராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ஆழ்வார் கோவில், பள்ளிவிளை பகுதியில் 2 வாரங்களுக்கு முன்பு தண்ணீர் குழாய் அமைப்பதற்கு குழிதோண்டப்பட்டது. பின்னர் அந்த குழியை மூடாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து 29-6-2022 அன்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை மூடினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முடங்கி கிடக்கும் சாலை பணி

நாகர்கோவில் இடலாக்குடி பட்டாரியார் தெரு பகுதியில் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லிகள் போடப்பட்டது. அதன்பின்பு எந்த வேலையும் நடைபெறாமல் சாலை சீரமைப்பு பணி முடங்கி கிடக்கிறது. இதனால், அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் ெசல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலை பணியை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பஷீர் பாய், இடலாக்குடி.

சுருங்கி வரும் சாலை

இரணியலில் இருந்து குருந்தன்கோடு செல்லும் சாலையில் மடவிளாகம் என்ற இடத்தில் சாலையோரம் குழி தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அதன்பிறகு தோண்டப்பட்ட பகுதியில் இதுவரை சாலை ேபாடவில்லை. இதனால், அந்த பகுதியில் சாைல அகலம் குறைந்து சுருங்கி வருகிறது. அந்த இடம் வளைவான பகுதி என்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சாைலயை செப்பனிட்டு விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

பஸ் நிலையத்தில் தேங்கும் தண்ணீர்

கருங்கல் பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் பாதையில் மழை காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அந்த நீரில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-‌பிபிலா கிராப், அரசகுளம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

நாகர்கோவில் புதுக்குடியிருப்பு, சாத்தான்கோவில் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜோணி, புதுக்குடியிருப்பு.

குளத்தை தூர் வார வேண்டும்

நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை பகுதியில் சிறுதாமரை குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாய தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் தூர் வாரப்படாமல் பாசி மற்றும் செடிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்டாலின், மாடத்தட்டுவிளை.

Tags:    

மேலும் செய்திகள்