'தினத்தந்தி' செய்தி எதிரொலி: நாடார் மேடு நேருஜி வீதியில் புதர்கள் அகற்றம்

‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாடார் மேடு நேருஜி வீதியில் புதர்கள் அகற்றப்பட்டன.

Update: 2023-05-17 20:49 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாடார் மேடு நேருஜி வீதியில் புதர்கள் அகற்றப்பட்டன.

பொதுமக்கள் புகார்

ஈரோடு மாநகராட்சி 58-வது வார்டுக்குட்பட்ட நேருஜி வீதியில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியை மாநகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்த செய்தி 'தினத்தந்தி'யில் நேற்று முன்தினம் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நேற்று முன்தினமே சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர்.

அதுமட்டுமின்றி, சாலையில் வளர்ந்து இருந்த முட்புதர்களையும் தூய்மை பணியாளர்களை கொண்டு வெட்டி அகற்றினார்கள். சாக்கடை பகுதி தூர்வாரப்பட்டது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகளுக்கு நன்றி

இதுபற்றி அவர்கள் கூறும்போது, நீண்டகாலமாக இந்த பகுதியின் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளித்து வருகிறோம். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் பகுதியில் துர்நாற்றம் வீசி வந்ததால் பலரும் நோய்களுக்கு ஆளாகி வந்தோம். நடந்து செல்லும் பாதையில் புல் புதராக வளர்ந்ததால் பாம்புகள் அங்கேயே அடைக்கலமாகி விட்டன. பாதுகாப்பு இல்லாத சாக்கடை கால்வாய் இருப்பதால் குழந்தைகள் விளையாட முடியாத சூழல். மழை வந்தால் வீதி முழுவதும் குளம்போல தண்ணீர் நிரம்பி, வீடுகளுக்குள் புகுந்து விடும் அவலம் என்று பல பிரச்சினைகள் இருந்தன. இந்த தகவல்கள் 'தினத்தந்தி'யில் செய்தியாக வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் வந்ததுடன், முதல் கட்டமாக பணியையும் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. அதே நேரம் இங்கு வெட்டப்பட்ட புல் புதர்களை அகற்றவும், சாக்கடையில் இருந்து தூர்வாரப்பட்ட கழிவுகளை அகற்றித்தரவும், எங்கள் பகுதி உள்பட நேருஜி வீதியில் செப்பனிடப்படாமல் உள்ள ரோடுகளை புதுப்பித்து தர வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாக எங்கள் பகுதியில் சாக்கடைகளுக்கு தடுப்பு ஏற்படுத்தி, வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதை தடுக்கவும் வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்