தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-05-31 19:00 GMT

உயர்கோபுர மின்விளக்கு பயன்பாட்டிற்கு வருமா?

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆதனக்கோட்டையில் இருந்து வண்ணாரப்பட்டி செல்லும் விளக்கு சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உயர்மின் கோபுர விளக்கு பயன்பாட்டிற்கு வராமல் உள்ளத. இதனால் இரவு நேரங்களில் அந்த இடம் இருட்டாக காணப்படுகிறது. இதனால் நடந்து செல்லும் பதாசாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனனவே சம்பந்தப்பட்ட உடனடியாக உயர்மின் கோபுர மின் விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆதனக்கோட்டை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி நகரில் காவிரி வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் மஞ்சள்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் இந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் கடலுக்கு செல்லும். தற்போது இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டபட்டு உள்ளத. இதனால் தண்ணீர் செல்லமுடியாமல் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மணமேல்குடி.

நாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும்மக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அன்னவாசல்

கூடுதல் பஸ் வசதி வேண்டும்

புதுக்கோட்டையில் இருந்து ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி வழியாக கந்தர்வக்கோட்டைக்கு 4 எண் கொண்ட நகர பஸ் இந்த வழியாக வந்து செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள் என இந்த வழித்தடத்தில் சென்று வருகின்றனர். ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுவதால் அனைவரும் சிரமமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆதனக்கோட்டை.

மின்தடையால் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மின்சாரம் அடிக்கடி இல்லாமல் போய் வருகிறது. இதனால் இரவு நேரங்களில் முதியவர்கள், பொதுமக்கள், சிறியவர்கள் தூங்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரிமளம். 

Tags:    

மேலும் செய்திகள்